» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் 2 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதன் 4, செப்டம்பர் 2024 11:06:10 AM (IST)

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஈட்டன், அஷ்யூரண்ட் நிறுவனத்தினர், தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிகாகோ வருகை தந்த போது தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்வர் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, மின் மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் தமிழகத்தில் ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளது.
அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
"சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்திற்காக ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஒப்பந்தம் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்' என முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சிகாகோ கடற்கரையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். சாலைகள் மற்றும் கடற்கரை சாலையில் முதல்வர் உற்சாகமாக சைக்கிள் ஒட்டிச்சென்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளை தர தயார்: புதின்
வியாழன் 22, ஜனவரி 2026 11:34:49 AM (IST)

ஜப்பான் முன்னாள் பிரதமரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 21, ஜனவரி 2026 4:05:36 PM (IST)

நைஜீரியாவில் தேவாலயங்களுக்குள் புகுந்து 170 பேர் கடத்தல் : ஆயுத கும்பல் அட்டகாசம்
புதன் 21, ஜனவரி 2026 8:32:20 AM (IST)

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பதில் 100 சதவீதம் உறுதி: டிரம்ப்
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:45:27 PM (IST)

காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!
திங்கள் 19, ஜனவரி 2026 11:39:03 AM (IST)

உகாண்டா அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி
ஞாயிறு 18, ஜனவரி 2026 12:16:51 PM (IST)

