» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை அதிபர் தேர்தலில் நமல் ராஜபக்சே போட்டி: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
புதன் 7, ஆகஸ்ட் 2024 4:21:30 PM (IST)
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளராக நமல் ராஜபக்சே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே (வயது 38) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார்.
நமல் ராஜபக்சே முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார். லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பயின்ற அவர், 2010 முதல் மூன்று முறை அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
முன்னதாக இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)
