» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 18ஆக அதிகரிப்பு!
வியாழன் 6, ஜூன் 2024 12:10:50 PM (IST)
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 18 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் பரீதாபாத் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜீஷன் என்பவரின் மகள் அலிஷா (17), அர்ஷத் என்பவரின் மகன் உமைர் (15), முபாரக் என்பவரின் மகன் அப்பாஸ் அலி (14) மற்றும் மெஹர் பாக்ரி என்பவரின் மகன் தோடா (25) ஆகிய 4 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
ஜீஷனின் மகன் முகமது ஹசன் என்ற அலி ஹைதர் இந்த வெடிவிபத்தில் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், மகளும் உயிரிழந்து விட்டார். 5 வயது மகள் கின்ஜா சிகிச்சை பெற்று வருகிறார். முறையான அனுமதி இன்றி கேஸ் சிலிண்டர் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன என அரசு நிர்வாகம் கூறி வருகிறது.
சட்டவிரோத, கியாஸ் மற்றும் சி.என்.ஜி. நிரப்பு நிலையங்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி துறை நிறுவன உயரதிகாரிகளுக்கு காவல் துணை ஆணையாளர் ஜெய்ன் உல் அபிதின் மேமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டவிரோத விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்துறை செயலாளருக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இதேபோன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய உபகரணங்கள், முறையான ஐ.சி.யு. வார்டுகள் உள்ளிட்டவை இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 20 ஆண்டுகளாக தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க போதிய கட்டிட வசதிகள் இல்லை என டாக்டர் தஹீர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)
