» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நடுரோட்டில் பெண் மேயரை சுட்டு கொன்ற மர்ம நபர்கள் : மெக்சிகோவில் பயங்கரம்
வியாழன் 6, ஜூன் 2024 8:56:25 AM (IST)
மெக்சிகோவில் நடுரோட்டில் பெண் மேயரை மர்ம நபர்கள் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அதிபர், பிரதிநிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் 128 உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்நது. இந்த தேர்தலுடன் உள்ளாட்சி தேர்தலும் நடந்து முடிந்தது. ஒரே கட்டத்தில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான மொரேனா கட்சியை சேர்ந்த கிளாடியா சீன்பாம் வெற்றி பெற்றார். அவர் 58.75 சதவீத வாக்குகளை பெற்றார். இதன் மூலம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை அவர் பெறுகிறார்.
மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மிசோகன் மாகாணம் கோடிஜா நகர் மேயராக யோலன்டா சான்சஸ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில் யோலன்டா உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த யோலன்டாவை வழிமறித்தது. பின்னர் அதிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் ஒன்று யோலன்டாவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியது.
இதில் தலை, கழுத்து, மார்பு பகுதி என பல்வேறு இடங்களில் குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் யோலன்டா சான்சஸ் உயிரிழந்தார். மெக்சிகோவில் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் மேயரை மர்ம நபர்கள் சுட்டு கொன்ற விவகாரம் அங்கே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)
