» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் கிடைப்பார்: பாக். தொழிலதிபர் நம்பிக்கை
புதன் 15, மே 2024 5:07:43 PM (IST)
"மோடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நல்லவர், பாகிஸ்தானுக்கும் அவரைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பார்” என்று நம்புவதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் - அமெரிக்கத் தொழிலதிபர் சஜித் தரார், பிரதமர் மோடியினைப் பாராட்டிய விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலிமைமிக்க தலைவர்; அவர், இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளார், அவர் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மீண்டும் வருவார் என்று பிரபல பாகிஸ்தான் - அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
”மோடி, ஓர் அற்புதமான தலைவர். மோடி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மற்றும் வர்த்தகத்தைத் தொடங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று தரார் கூறினார்.அமைதியான பாகிஸ்தான், இந்தியாவுக்கும் நல்லது. இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி இருப்பார் என்று எல்லா இடங்களிலும் தகவல்கள் பெறப்படுகின்றன” என்று தரார் பதிலளித்தார்.
இந்தியாவில் 97 கோடி மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவது, ஓர் அதிசயத்தைத் தவிர வேறில்லை. இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. அங்கு மோடியின் பிரபலத்தை நான் காண்கிறேன், 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எழுச்சி ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய ஜனநாயகத்திலிருந்து மக்கள் கற்றுக் கொள்வார்கள் என்பதை எதிர்காலத்தில் நீங்கள் காண்பீர்கள் "என்று தரார் கூறினார்.
பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் வரிகளை அதிகரிக்க விரும்புகிறது. மின்சார செலவுகள் அதிகரித்துள்ளன. எங்களால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை "என்று அவர் கூறினார்.
"துரதிர்ஷ்டவசமாக, அடிமட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த முயற்சியும் இல்லை. ஏற்றுமதியை அதிகரிப்பது எப்படி? பயங்கரவாதத்தை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவது என சிந்திக்க தலைவர் இல்லை, தற்போது, பாகிஸ்தானில் அமைதியின்மை நிலவுகிறது. மற்றும் அரசியல் வழிநடத்தலின்மை நிலவுகிறது. இந்த பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் எங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய சில தலைமைகளைப் பெற நாங்கள் விரும்புகிறோம்" என்று தரார் கூறினார்.
மக்கள் கருத்து
பைத்தியக்கார FOOLISHமே 18, 2024 - 12:58:36 PM | Posted IP 162.1*****
SEBASTIAN SIMON -சமயத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் கில்லாடி. இவனுக்கு எதுவுமே தெரியாது. வாய் ஜாலம் செய்வதில் மன்னன்.இவனை நம்பியிருக்கும் பைத்தியக்காரர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
foolish peoplesமே 17, 2024 - 11:55:21 AM | Posted IP 172.7*****
இங்கேயும் பாகிஸ்தான் ஆதரவு தத்தி சுடலை உள்ளார், அவரையும் சாமானையும் கூட்டிட்டு போகவும்.
PEOPLESமே 16, 2024 - 02:30:41 PM | Posted IP 172.7*****
இங்கு சைமன் என்று ஒரு கோமாளி உள்ளார், அவரை கூட்டி கொண்டு போய் அதிபர் ஆக்கி கொள்ளுங்கள். இந்த ஆமை தொல்லை தங்க முடியல்ல
பையித்தியக்கார foolish peoplesமே 19, 2024 - 11:06:33 AM | Posted IP 162.1*****