» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: ஐ.நா. நம்பிக்கை!!
சனி 30, மார்ச் 2024 12:55:18 PM (IST)
தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இதனிடையே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய அரசுகள் கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டதாக கூறி சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
புதன் 22, ஏப்ரல் 2026 10:54:33 AM (IST)

ஜப்பானில் 70 ஆண்டுகால ஆயுத ஏற்றுமதி தடை நீக்கம்: ஆஸ்திரேலியாவுடன் ₹60,000 கோடி ஒப்பந்தம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:28:15 AM (IST)

இந்தியா - இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள்: துணை ஜனாதிபதி முன்னிலையில் கையெழுத்து!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 9:08:06 AM (IST)

லெபனானில் இயேசு சிலையைச் சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்: அமைச்சர் கடும் கண்டனம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:55:13 PM (IST)

ஈரானிய கச்சா எண்ணெய்: டாலருக்குப் பதிலாக சீன யுவானில் பணம் செலுத்திய இந்தியா!
சனி 18, ஏப்ரல் 2026 5:36:01 PM (IST)

ஈரான் உடனான மோதலில் மிக விரைவான வெற்றி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:57:28 PM (IST)

