» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பட்டாசுக்கு முழுத் தடையா? – பசுமை பட்டாசு குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்!
வியாழன் 23, ஜூலை 2026 4:10:22 PM (IST)
பசுமை பட்டாசுகளில் உள்ள நிறை, குறைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதால் நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'பேரியம்' என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என்றும், சரவெடி தயாரிக்கக் கூடாது என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, அதிகக் காற்று மாசுவை ஏற்படுத்தும் பேரியம் இல்லாத பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இருப்பினும், பசுமை பட்டாசு என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பேரியம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் அடங்கிய பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், நாடு முழுவதும் பட்டாசுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இவழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா, பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பசுமை பட்டாசில் இருக்கும் நிறை, குறைகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வினாத்தாள் கசிவு: பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!
வியாழன் 23, ஜூலை 2026 11:54:40 AM (IST)

இந்திய அஞ்சல் துறை பெயரில் புதிய வகை சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ அறிவுறுத்தல்!
வியாழன் 23, ஜூலை 2026 11:08:23 AM (IST)

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்: திமுக புறக்கணிப்பு!
புதன் 22, ஜூலை 2026 12:16:45 PM (IST)

நீட் தேர்வு முறைகேடு, மாணவர்கள் மீது தடியடி: மோடி, அமித் ஷா பதவி விலக ராகுல் வலியுறுத்தல்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:58:25 PM (IST)

ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:35:16 PM (IST)

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்டச் சோதனை முயற்சி!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:36:15 AM (IST)


