» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வினாத்தாள் கசிவு: பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!

வியாழன் 23, ஜூலை 2026 11:54:40 AM (IST)

cjpmodi.jpg

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பைக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முற்றிலும் நிராகரித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது போராட்டம் நேற்று 33-ஆவது நாளை எட்டியது. இந்த போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

முன்னதாக, கடந்த 20-ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் நடத்திய போராட்டம் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு பெரும் சவாலாக அமைந்தது. காவல்துறையின் தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்த போதிலும், ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

பிரதமர் மோடியின் பதிவு:

இதுகுறித்துப்ப் பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

"இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை.

மாணவர்களின் நலனைப் பாதுகாக்கத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் (Fast-track Court) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடைய நபர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை இந்த விரைவு நீதிமன்றம் உறுதி செய்யும்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் குற்றமிழைத்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவர்."

இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இந்த 'எக்ஸ்' தளப் பதிவைச் சுட்டிக்காட்டியுள்ள கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பினர், விரைவு நீதிமன்ற அறிவிப்பு மட்டுமே போதாது என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கட்டாயம் பதவி விலக வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory