» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)



இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். பரிவர்த்தனை தொடர்பான புதிய கட்டண நடைமுறை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி அனுப்பியுள்ள அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 5 முறை மட்டுமே ஏ.டி.எம். மூலம் கட்டணமின்றிப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். 5 முறைக்கு மேலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ. 17 கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்தக் கட்டணத்துடன் கூடுதலாக ஜி.எஸ்.டி. வரியும் தனித்தனியாக வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கியின் இந்தச் கூடுதல் கட்டண அறிவிப்பு சாமானிய மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory