» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமெரிக்கா ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பா? மத்திய அரசு விளக்கம்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:52:14 PM (IST)
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)


