» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உடல் நலக்குறைவால், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று (ஜனவரி 06) டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக அழைத்து வரப்பட்டார். அவர் வழக்கமான பரிசோனைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர்.

தற்போது மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா இருக்கிறார். அவர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory