» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜிலேபி செய்த ராகுல்: விரைவில் திருமணம் செய்ய கோரிக்கை வைத்த பேக்கரி அதிபர்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:30:24 PM (IST)

டெல்லியில் உள்ள பிரபல இனிப்புக் கடைக்குச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இனிப்பு பலகாரங்களை செய்தார்.
டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்டேவாலா பேக்கரியின் உரிமையாளர் சுஷாந்த் ஜெயின், "ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்துதான் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள், அப்போதுதான் எங்களுக்கு ஸ்வீட் ஆர்டர் எங்களுக்கு கிடைக்கும் என்று அவரிடம் நான் கூறினேன்.
அவர் எங்கள் கடைக்கு வரும்போது, தன் கையாலேயே ஸ்வீட் செய்வதாக கூறினார். மறைந்த அவருடைய தந்தை ராஜிவ் காந்திக்கு இமார்தி (ஜிலேபி வகை) மிகவும் பிடிக்கும். நீங்கள் அதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று ராகுலிடம் கூறினேன். அவருக்கு பெசன் லட்டுகளும் பிடித்திருந்தது. அந்த இரண்டையும் அவரே தன் கையால் செய்தார்” என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:52:38 AM (IST)

பெண்ணை எரித்துக் கொன்று நகையை பறித்த போலீஸ்காரர் மனைவி: பரபரப்பு தகவல்கள்
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:48:43 AM (IST)

பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
சனி 18, அக்டோபர் 2025 5:44:44 PM (IST)

குஜராத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 5:40:55 PM (IST)

குஜராத்தில் பூபேந்திர படேல் அமைச்சரவை பதவியேற்பு: ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:21:52 PM (IST)

தமிழக ஆளுநருக்கு எதிரான மனுக்கள் விசாரணை விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:33:12 PM (IST)
