» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்கள் திருடிய ராணுவ வீரர் கைது

திங்கள் 21, ஜூலை 2025 12:29:55 PM (IST)

மும்பை ராணுவ முகாமில் சக வீரர்கள் 29 பேரின் செல்போன்களை திருடிய ராணுவ வீரர் கோவையில் கைது செய்யப்பட்டார்.

மும்பை கொலபாவில் உள்ள ராணுவ படை பிரிவில் கடந்த மாதம் ராணுவ வீரர்களின் 29 செல்போன்கள் மாயமாகின. இது குறித்து கப்பரேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மாயமான ஒரு செல்போன் தமிழ்நாட்டில் உள்ள கோவையில் சுவிட்ச்-ஆன் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் செல்போனை பயன்படுத்திய அல்பா துய்பாங் (24) என்பவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அல்பா துய்பாங் ராணுவ வீரர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மிசோரமை சேர்ந்த இவர், 4 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்தார். இவர் மும்பை கொலபா ராணுவ முகாமில் பணியில் இருந்தபோது சக வீரர்களின் செல்போன்களை திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. 

போலீசார் அவரிடம் இருந்து 20 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவர் திருடி சென்ற செல்போன்களை விற்பனை செய்ய இருந்ததாக போலீசார் கூறினர். ராணுவ வீரர் அல்பா துய்பாங்கை கப்பரேடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory