» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

ஹரியானா, கோவாவிற்கு ஆளுநர்களையும், லடாக்கிற்கு துணை நிலை ஆளுநரையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

இதன்படி, கோவா மாநில ஆளுநராக பசுபதி அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மூத்த அரசியல்வாதி ஆவார். விமான போக்குவரத்து துறையின் முன்னாள் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

இதேபோன்று, அரியானா மாநில ஆளுநராக ஆஷிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பேராசிரியரான அவர் உயர் கல்வி துறையில் நிர்வாக துறையில் அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

லடாக் யூனியன் பிரதேச ஆளுநராக கவீந்தர் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார். ஜம்முவை சேர்ந்த மூத்த பா.ஜ.க. உறுப்பினரான அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டசபைக்கான சபாநாயகராகவும் பதவி வகித்திருக்கிறார்.

லடாக் துணை நிலை ஆளுநராக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலான, பி.டி. மிஷ்ரா ராஜினாமா செய்த நிலையில், அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்று கொண்டார். இதனை குடியரசுத் தலைவர் மாளிகை உறுதி செய்து அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory