» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் மாயமான பல்கலைக்கழக மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு!
திங்கள் 14, ஜூலை 2025 11:36:00 AM (IST)
டெல்லியில் கடந்த 6 நாள்களுக்கு முன் காணாமல் போன பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7 ஆம் தேதி மாயமானார். இதையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகாரளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையின் போது, "சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து யமுனை ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது.
நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் நேற்று இரவு மீட்டனர். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

இண்டியா கூட்டணி எதிர்ப்பு எதிரொலி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி
சனி 18, ஏப்ரல் 2026 10:45:21 AM (IST)

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

