» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!
திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)
ஆந்திராவில் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த சம்பவத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. இதனையடுத்து, போலீசார் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
ஜெகன் மோகன் ரெட்டியின் தனி உதவியாளர் கே.நாகேஷ்வர் ரெட்டி, ஒய்.வி.சுப்பாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னி வெங்கடராமையா, முன்னாள் அமைச்சர் விடடலா ரஜினி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய நடைமுறை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடரும் என்று எஸ்.பி. குமார் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)
