» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல இன்னல்களை தாண்டி, பால்கன்-9 ராக்கெட் மூலம் இன்று நண்பகல் 12.01 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. 28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்கின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். பாசிப்பயறு, வெந்தயத்தை முளைக்க வைத்து சுபான்ஷு சுக்லா ஆய்வு செய்கிறார். இந்தநிலையில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை வரவேற்கிறோம். 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகளை தன்னுடன் சுபான்ஷு சுக்லா சுமந்து செல்கிறார். சுபான்ஷு சுக்லாவுக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)

காதலனை பழிவாங்க திட்டம்: 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் பொறியாளர் கைது!
புதன் 25, ஜூன் 2025 12:35:30 PM (IST)
