» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு: ஏா் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 11:47:26 AM (IST)

ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக உத்தரவின் அடிப்படையில் 3 அதிகாரிகளை ‘ஏர் இந்தியா’ நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது தூரத்தில் ஒரு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் இருந்த விமானி, பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியானார்கள். ஒரே ஒரு பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, ஏர் இந்தியா போக்குவரத்தின் வருகைப் பதிவேடு, பணிப் பதிவேடு, செயல்பாட்டு அறிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் சில விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்பைவிட கூடுதல் நேரம் விமானிகளுக்கு பணி ஒதுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது போல மேலும் சில விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அந்த விதிமீறலில் ஈடுபட்ட 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ஏர் இந்தியா நிறுவனம் நேற்று உடனடியாக செயல்படுத்தியது. 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்ததுடன் அந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கும் தெரிவித்து இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையில், இயக்க கட்டுப்பாட்டு மைய தலைவர் உள்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)

ஒருவன்Jun 23, 2025 - 03:16:43 PM | Posted IP 172.7*****