» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 12:49:44 PM (IST)
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே.25ஆம் தேதி நடைபெறவிருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.”இந்தியாவில் போர்ப் பதற்றம் இருக்கும்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது நல்லதல்ல” என பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.
இதனிடையே நேற்றிரவு (மே.8) தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப குழிவினர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடைபெறும் தேதி குறித்த முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் : பிரதமர் மோடி வரவேற்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:53:29 PM (IST)

சிறுமிக்கு 3 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை: கால்பந்து பயிற்சியாளர் போக்சோவில் கைது!
திங்கள் 15, ஜூன் 2026 4:25:49 PM (IST)

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ராகுல் காந்தி ஜூன் 17 முதல் நாடு முழுவதும் பிரச்சாரம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:09:38 PM (IST)

தாய்லாந்திலிருந்து ரூ.11.82 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: கேரள மாடல் அழகி அதிரடி கைது
சனி 13, ஜூன் 2026 12:30:17 PM (IST)

ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்: ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
சனி 13, ஜூன் 2026 11:44:11 AM (IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம்...!
வெள்ளி 12, ஜூன் 2026 5:43:40 PM (IST)


