» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பெருமிதம் அளிக்கிறது : ராகுல் காந்தி

புதன் 7, மே 2025 10:11:17 AM (IST)

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த ராணுவ நடவடிக்கை பெருமை அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது. 

இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம். ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில்; தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியான கொள்கையை கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தை எண்ணி பெருமைப்படுகிறோம். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு, ராணுவத்துடன் காங்கிரஸ் துணை நிற்கும் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory