» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)

குஜராத்தில் அரபிக் கடலில் கொட்டப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம், இந்திய கடல் எல்லைக் கோடு அருகே போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டன.
அப்போது அருகில் வந்த கடலோர காவல்படை கப்பலைக் கண்டதும் படகில் இருந்த போதைப்பொருள்களை கடலில் வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 300 கிலோ போதைப்பொருள்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்தது.
அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடி இருக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள் மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் விசாரணைக்காக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:25:39 PM (IST)

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சண்டை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:26:16 AM (IST)

பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவோம்: பிரதமர் மோடி ஆவேசம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:27:44 PM (IST)

பஹல்காம் தாக்குதல் : உளவுத்துறை தோல்விகள் குறித்து ஆய்வு நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:33:36 PM (IST)

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்?
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:42:42 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:03:16 PM (IST)
