» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: பா.ஜ., அரசு புகாருக்கு சிசோடியா பதில்

வெள்ளி 14, மார்ச் 2025 5:41:36 PM (IST)

டெல்லி அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000கோடி ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில், பா.ஜ., அரசு முன்பு அடி பணிய மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, டெல்லி அரசு பள்ளிகளில் பொதுப்பணித்துறை மூலம் 2,400 வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் குற்றம்சாட்டியது. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்து உள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைதான சத்யேந்தர் ஜெயினும், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான மணீஷ் சிசோடியாவும் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் அவர்களுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், 'பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, என் மீதும், சத்யேந்தர் ஜெயின் மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதாக கேள்வி பட்டேன். எங்கள் மீது பா.ஜ., அரசு எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும். ஆம் ஆத்மி தலைவர்கள் யாரும் பா.ஜ., முன்பு அடி பணிய மாட்டோம்,' இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து, பேசிய அவர், 'ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி, டெல்லி குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர் கொடுத்து விட்டீர்களா? பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர தொகை வழங்கி விட்டீர்களா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory