» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்தினேன் : நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

வியாழன் 13, மார்ச் 2025 5:23:43 PM (IST)

தங்கத்தை எப்படி மறைப்பது என்பதை யூடியூப் பார்த்து கற்றுக்கொண்டேன் என்று நடிகை ரன்யா ராவ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது கடந்த 3-ந் தேதி நடிகை ரன்யா ராவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ரூ.12½ கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.2.67 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

நடிகை ரன்யா ராவின் தந்தை ராமசந்திர ராவ், கர்நாடக போலீசில் டி.ஜி.பி. அந்தஸ்து நிலையில் அதிகாரியாக உள்ளார். அதனால் அவர் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது விமான நிலையத்தில் இருந்து வீடு வரை பாதுகாப்புக்கு போலீஸ் கார், காவலர்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. டி.ஜி.பி.யின் மகள் என்பதால் அவரை போலீசார் எங்கும் சோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தனது தந்தையின் பெயரை அவர் தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அவருக்கு டி.ஜி.பி. ராமசந்திர ராவ் உதவி செய்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, ரன்யா ராவ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ரன்யா ராவிற்கு ஜாமீன் வழங்க விசாரணை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூல விவரங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1-ம் தேதி எனக்கு ஒரு வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

துபாய் விமான நிலையத்தின் முனையம் 3-ல் உள்ள கேட் ஏ -க்குச் செல்லுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது. துபாய் விமான நிலையத்தில் தங்கத்தை சேகரித்து பெங்களூருவில் டெலிவரி செய்யுமாறு என்னிடம் கூறப்பட்டது. தங்கத்தை எப்படி மறைப்பது என்பதை யூடியூப் பார்த்து கற்றுக்கொண்டேன். விமான நிலையத்தில் இருந்து பேண்டேஜ்கள் மற்றும் கத்தரிக்கோல்களை வாங்கி, விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் தங்கக் கட்டிகளை தனது உடலில் மறைத்து வைத்தேன்.

என்னை தொலைபேசியில் அழைத்தது யார் என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. தங்கக் கட்டிகளை தன்னிடம் ஒப்படைத்த பிறகு அவர் உடனடியாக வெளியேறினார். நான் அவரை மீண்டும் சந்தித்ததில்லை, பார்த்ததில்லை. அந்த நபர் சுமார் 6 அடி உயரமும், வெள்ளை நிறமும் கொண்டவர். மிக சரளமாக அமெரிக்க உச்சரிப்பு ஆங்கிலத்தை பேசினார். சிக்னலுக்கு அருகில் உள்ள ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் தங்கத்தை வைக்க வேண்டும் என்றனர்" இவ்வாறு ரன்யா ராவ் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory