» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
துபாயிலிருந்து கடத்தி வந்த 14.80 கிலோ தங்கம் பறிமுதல் : பிரபல நடிகை கைது!
புதன் 5, மார்ச் 2025 12:06:16 PM (IST)
துபாயிலிருந்து 14.80 கிலோ தங்கத்தை கடத்தி வந்த நடிகை ரான்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த நடிகை ரன்யா ராவ், தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்ககட்டிகள் இருப்பது தெரியவந்தது.
அதோடு அவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நடிகை ரன்யா ராவிடம் இருந்த நகை, தங்ககட்டி என்று மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் 14.80 கிலோ தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
முன்னதாக கடந்த 15 நாளில் மட்டும் ரன்யா ராவ் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் கிளம்பியதையடுத்து நேற்று துபாயில் இருந்து வந்த அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே நடிகை ரன்யா ராவின் தந்தை ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், அவர் கர்நாடகாவில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ. 3,984.86 கோடி செலவில் 3வது ஏவுதளம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:35:04 PM (IST)

பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:37:00 AM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)

வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் : கிரண் ரிஜிஜு
புதன் 2, ஏப்ரல் 2025 3:28:20 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை: காங்கிரஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 12:09:49 PM (IST)

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:40:05 PM (IST)
