» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:20:59 PM (IST)

புதிய வருமான வரி மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
புதிய வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் பட்ஜெட் உரையின்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மசோதாவில் நீளமான சொற்களுக்கு பதில் சிறிய சொற்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு ஆகிய சொற்களுக்கு பதில், வரி ஆண்டு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, புதிய வருமான வரி சட்டம் ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த சட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில் மக்களவை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)
