» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? உச்சநீதிமன்றம் கேள்வி

புதன் 12, பிப்ரவரி 2025 5:05:57 PM (IST)

அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம். வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.

அப்போது, அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் அவருக்கு எதிரான வழக்கை மெரிட்டில் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த முறையே அதிருப்தியை தெரிவித்திருந்தோம், உரிய விளக்கம் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளதால் அவர்கள் பயப்பட வாய்ப்புள்ளது. 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக  தொடர்ந்தால் என்னவாகும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory