» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாசிக் - புனே நெடுஞ்சாலையில் கோர விபத்து : மினி வேன் மோதி 9 பேர் உயிரிழப்பு

வெள்ளி 17, ஜனவரி 2025 5:12:43 PM (IST)

புனேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம், புனே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மினி வேன் இன்று காலை மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மினிவேன் நாராயண்கோன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் வந்த டெம்போ அதன் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory