» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முல்லைப்பெரியாறு அணை வழக்கில் தேசிய அளவில் நிபுணர் குழு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!

புதன் 8, ஜனவரி 2025 5:28:27 PM (IST)

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. 

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நிபுணர் குழுவை இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

தேசிய அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழு அமைப்பதில் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும், நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜனவரி 22ல் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory