» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை நீதிமன்ற பகுதி வேலை நாட்கள் என பெயர் மாற்றம்!

வெள்ளி 8, நவம்பர் 2024 12:11:36 PM (IST)

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறையானது, நீதிமன்ற பகுதி வேலை நாட்கள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு விடப்படும் கோடைக்கால விடுமுறை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீண்ட நாட்கள் விடுமுறையில் இருப்பதாகவும் பலர் விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறையானது, நீதிமன்ற பகுதி வேலை நாட்கள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற விதிகள், 2013ன் திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற பகுதி வேலைநாட்களின் எண்ணிக்கை, நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற அலுவலகங்களுக்கான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை ஆகியவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் நிர்ணயம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory