» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு!

திங்கள் 11, நவம்பர் 2024 12:28:03 PM (IST)

உச்சநீதிமன்றத்தின்  51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின்  51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சஞ்சீவ் கன்னா அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory