» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தரபிரதேசம், கேரளா, பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தல் நவ.,20க்கு மாற்றம்: இ.தே.ஆ. அறிவிப்பு
திங்கள் 4, நவம்பர் 2024 5:36:52 PM (IST)
கேரளா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற இருந்த சட்டசபை இடைத்தேர்தல் நவ.20க்கு மாற்றப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, கேரளாவில் 1 என மொத்தம் 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.13ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த நாளில், திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.இதனையடுத்து, 14 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை நவ.,20ம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இங்கு ஓட்டு எண்ணிக்கை நவ.,20 ல் நடக்கும். அதேநேரத்தில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவ.,13ல் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்!
சனி 3, ஜனவரி 2026 11:06:20 AM (IST)

