» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாலஸ்தீனத்துக்கு இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 11:45:44 AM (IST)
பாலஸ்தீனத்துக்கு இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் இன்று (அக். 22) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது. பாலஸ்தீன மக்களின் வசிப்பிடமான காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்தி வரும் தொடர் தாக்குதல்களால், காஸாவில் வாழும் மக்கள் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 30 டன் மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாலஸ்தீனத்துக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள முதல் தொகுதியில், அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்து மற்றும் உபகரணங்கள், பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருள்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்கள், கலோரி அதிகம் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.