» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

வியாழன் 21, நவம்பர் 2024 3:51:14 PM (IST)



அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொழிலதிபர் அதானி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

'சோலார் ஒப்பந்தத்துக்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அதனை மறைத்து போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி நிதி பெற்றுள்ளார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களும் இருப்பதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டின் மூலமாக இந்திய மற்றும் அமெரிக்க சட்டத்தை அதானி மீறியுள்ளது அம்பலமாகியுள்ளது. இருந்தும்கூட, அதானி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இந்த நாட்டில் பல முதல்வர்கள் எளிதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால், ரூ.2000 கோடி ஊழல் செய்தவருக்கு பிரச்சினையே இல்லை. அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் அதானியை இந்திய பிரதமர் பாதுகாக்கிறார். மோடி - அதானி ஊழலில் கூட்டு என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory