» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் : இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
சனி 5, அக்டோபர் 2024 5:25:59 PM (IST)
தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இண்டிகோ எக்ஸ் வலைதள பக்க பதிவில், "தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, எங்களது பயணிகள் விமான நிலையங்களில் செக்-இன் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். பயணிகளுக்கு உதவுவதற்காக எங்களது நிறுவன பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் முடிந்தவரை தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்புநிலைக்கு திரும்புவதற்காக பணியாற்றி வருகிறோம்" என விளக்கம் அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)

கரூரில் 41 உயிரிழந்த உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:20:37 AM (IST)

தமிழகம், கேரளம் உட்பட 10 மாநிலத்தில் பணியாற்ற பெண்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்
சனி 11, அக்டோபர் 2025 4:49:09 PM (IST)
