» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொழில்நுட்ப பராமரிப்பு பணி: பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது!

சனி 5, அக்டோபர் 2024 10:33:35 AM (IST)

தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்.7ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ந் தேதி (நேற்று) இரவு 8 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை இயங்காது.

இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்பதோடு, தங்களது நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு, பராமரிப்பு பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory