» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை : ஆர்பிஐ அறிவிப்பு!
செவ்வாய் 30, ஜூலை 2024 5:31:37 PM (IST)
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் தேசிய, மாநில விடுமுறை தினங்கள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்றன. வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை. அத்துடன், பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும். மாநிலங்களை பொருத்து விடுமுறை நாட்கள் மாறுபடும்.
ஆகஸ்ட் 2024-க்கான தேசிய மற்றும் மாநில அளவிலான விடுமுறை நாட்கள் வருமாறு:-
ஆகஸ்ட் 3- கேர் பூஜை (அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 4- ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 8- டெண்டாங் லோ ரம் பாத் (சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 10 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
ஆகஸ்ட் 11- ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 13- தேசபக்தர் தினம் (இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 18- ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 19- ரக்சா பந்தன் (திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 20- ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கொச்சியில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 24- நான்காவது சனிக்கிழமை விடுமுறை
ஆகஸ்ட் 25- ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 26- கிருஷ்ண ஜெயந்தி (குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)
வங்கிகளுக்கு சென்று முக்கியமான பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள், இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டுவது அவசியம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)


.gif)