» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் : காங்கிரஸ் கட்சி கடிதம்
செவ்வாய் 9, ஜூலை 2024 3:55:51 PM (IST)
பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்களவை தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் "பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.கடந்த 2-ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, '2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத் தலைவர் எதிர்ப்புறத்திற்கு ஆதரவாக இருந்தது' என்றார். பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல.
பிரதமர் மோடி செய்ததைப் போல் வேறு எந்தப் பிரதமரும் மக்களவை சபாநாயகரையோ, மாநிலங்களவை அவைத் தலைவரையோ விமர்சித்துப் பேசியது இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வட மாவட்டங்களை மிரட்டிய மோந்தா புயல் ஆந்திராவில் கரையை கடந்தது
புதன் 29, அக்டோபர் 2025 10:35:31 AM (IST)

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த்: பி.ஆர்.கவாய் பரிந்துரை!
திங்கள் 27, அக்டோபர் 2025 12:18:51 PM (IST)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: இந்தூர் வாலிபர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:49:58 PM (IST)

பிஹாரில் ஊடுருவல்காரர்களை எங்கள் அரசு வெளியேற்றும்: அமித் ஷா பிரச்சாரம்
சனி 25, அக்டோபர் 2025 5:38:13 PM (IST)

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)


.gif)