» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெகன் மோகன் கட்சி வெற்றி பெறுமென பந்தயம் கட்டிய நபர் திடீர் தற்கொலை

திங்கள் 10, ஜூன் 2024 5:02:51 PM (IST)

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமென பந்தயம் கட்டிய நபர் தற்கொலை செய்துகொண்ட ம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 11 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆந்திரத்தை ஆட்சி செய்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. மேலும், மக்களவைத் தொகுதிகளிலும் 16 இடங்களை கைப்பற்றியுள்ள சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைய முக்கிய கூட்டணிக் கட்சியாக உருவெடுத்துள்ளார்.

இதனிடையே ஆந்திர மாநில முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியே மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என துர்பு திகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்கவரபு வேணு கோபால் ரெட்டி என்பவர் பலரிடம் பந்தய வடிவில் பணம் வசூலித்ததாகவும், பின்னர் அதே தொகையை மற்றவர்களிடம் பந்தயம் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி தோல்வியடைந்ததால், பந்தயத் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் வேணுவுக்கு ஏற்பட்டது. இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளான அவர் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி கோழிப்பண்ணையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலை அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜக்கவரபு வேணு கோபால் ரெட்டி பந்தயம் கட்டி சுமார் ரூ.5 கோடி இழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory