» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் தேர்தல் வன்முறை : தலைமைச் செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்!
புதன் 15, மே 2024 5:48:19 PM (IST)
ஆந்திராவில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி அம்மாநில தலைமைச் செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
மக்களவை 4வது கட்ட தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் (மே 13) தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 81.86 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக இன்று (மே 15) தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிகபட்சமாக குப்பம் தொகுதியில் 89.88 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா கூறியுள்ளார்.
இதனிடையே, நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கு அம்மாநிலத்தை ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் மாறி மாறி குற்றம்சாட்டின. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறியது குறித்து நேரில் விளக்கம் அளிக்கும்படி ஆந்திர மாநில தலைமைச் செயலர், டிஜிபி.,க்கு தலைமை தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை, அவர்கள் டில்லி வந்து, கலவரம் ஏன் நடந்தது?, தடுக்க தவறியது ஏன்?, இனி வரும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மனில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு
சனி 27, டிசம்பர் 2025 3:48:59 PM (IST)

இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:01:58 PM (IST)

கிறிஸ்துமஸ் பொருள்களை அடித்து நொறுக்கிய சம்பவம்: இந்து அமைப்பினர் 4 பேர் கைது!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:08:11 PM (IST)

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமல்: ரயில்வேக்கு ரூ.600 கோடி வருவாய் அதிகரிப்பு
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:25:18 AM (IST)

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை: பிரதமர் மோடி பங்கேற்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 12:46:38 PM (IST)



.gif)