» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:31:47 AM (IST)

புது டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் இன்று(ஏப். 2) ஆஜரானார்.

தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக் (35), மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரை, 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, இன்று டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, 'சம்மன்' அனுப்பினர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர், புது டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று(ஏப். 2) ஆஜரானார். முன்னதாக அவர் கூறும்போது, "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் தரப்பு நியாயங்களையும் உண்மைகளையும், அதிகாரிகளிடம், 100 சதவீதம் எடுத்து வைத்து வெற்றியுடன் திரும்பி வருவேன்' என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory