தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (23). இவரது மனைவிக்கு கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் 4 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மேசேஜ் அனுப்பி வந்தாராம். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சிதம்பரம், அவரது உறவினர் வின்ஸ்டன் என்ற பண்டாரி (18) மற்றும் 5 சிறுவர்கள் சேர்ந்து சுபாஷ் வசித்து வரும் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு கேட்டின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து 5 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

