கடந்த ஜூலை மாதம் முதல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக்கழக (தவெக) எம்.எல்.ஏ. சரவணனுக்கு அளிக்கப்பட்டு வந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை கொலை செய்ய மர்ம நபர்கள் முயற்சிப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் எம்.எல்.ஏ. சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து உளவுத்துறை பரிந்துரையின் பேரில், அவரது பாதுகாப்பு கருதி கடந்த ஜூலை மாதம் முதல் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று (அக்.27) முதல் அந்த பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை.

தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.