தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வாட்டர் டேங்க் அருகில், அஞ்சப்பர் ஹோட்டல் எதிர்ப்புறம் உள்ள மங்கள் மஹால் கட்டிடம் அருகே பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த பழமையான வேப்ப மரம் ஒன்று வளர்ந்திருந்தது.
இந்நிலையில், நேற்று இரவில் அப்ப பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர், அந்தப் பழமையான வேப்ப மரத்தை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
மரத்தின் மேல் மின்சார வயர்களோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறாக வேறு எந்தக் காரணங்களோ இல்லாத நிலையில், யாரோ சிலர் திட்டமிட்டே இந்த மரத்தை வெட்டியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பயனளித்து வந்த மரத்தைச் சட்டவிரோதமாக வெட்டிச் சென்ற நபர்கள் மீது தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமை ஆர்வலர் ஆனந்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

