தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள செந்தியம்பலம் கிராமத்தில் பொது நூலகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அகில இந்திய கோழியர் இராச்சியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய கோழியர் இராச்சியம் மாநிலத் தலைவர் ஆனந்தராஜ் அனுப்பியுள்ள மனு தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள எங்கள் செந்தியம்பலம் கிராமத்தில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது எங்கள் கிராமத்தில் பொது நூலக வசதி இல்லாததால், மாணவர்கள் பாடப்புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான பொது அறிவு நூல்கள் மற்றும் நாளிதழ்களைப் பெறுவதில் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் செந்தியம்பலம் கிராமத்தில் ஒரு பொது நூலகம் அமைப்பது மிகவும் அவசியமாகும். எனவே, கிராமப் பொதுமக்கள் நலன் கருதி செந்தியம்பலம் கிராமத்தில் விரைவில் பொது நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.