தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சன்னதி தெருவைச் சேர்ந்த கனகன் மகன் கலைச்செல்வன் (68) என்பவர் மீதான பண மோசடி புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா, கலைச்செல்வன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவரை உண்மைக் குற்றவாளி என உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 7 ஆண்டுகள் கடின சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.