இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாகக் கருதப்படும் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நாளை (அக்டோபர் 20) நள்ளிரவு நடைபெறவுள்ள நிலையில், இதைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென்காசி வெதர்மேன் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (அக்டோபர் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தசரா திருவிழாவை முன்னிட்டுக் குலசேகரன்பட்டினம் திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்யவும், சூரசம்ஹாரத்தைக் காணவும் வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் மழைக்கேற்றவாறு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

