பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸின் லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு, பட்டுப்புடவை வழங்கும் புதிய முன்னெடுப்பை அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளதாவது:

"கடந்த 20 ஆண்டுகளில், எங்கள் அறக்கட்டளை குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், உணவு வழங்குதல் எனப் பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்துள்ளது. தேவையுள்ள மக்களுக்குச் சேவை செய்யச் சென்றிருந்த ஒரு தருணத்தில், ஒரு பெண் என்னிடம் வந்து, தனக்கு ஒரு அழகான பட்டுப்புடவை வேண்டும் என்று கோரும் கடிதம் ஒன்றை வழங்கினார்.

அந்தக் கடிதத்தைப் படித்தபோது, கிராமப்புறங்களில் வாழும் இன்னும் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பட்டுப்புடவையைக் கூடப் பார்த்திருக்கவோ அல்லது அணிந்திருக்கவோ வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருப்பார்கள் என்று நான் சிந்தித்தேன்.

னவே, தாய்மார்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், அவர்களின் ஆசியைப் பெறவும் வேண்டும் என்ற எளிய நோக்கத்தோடு முதற்கட்டமாக 5,000 பட்டுப்புடவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது பிறந்தநாளான அக்டோபர் 29 அன்று, தான் பிறந்து வளர்ந்த ராயபுரத்தில் இந்தச் சிறப்புமிக்க புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.