தமிழ்நாடு

Browse content

203 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேரி சார்ஜண்ட் பெண்கள் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு!

பாளையங்கோட்டையில் உள்ள 203 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேரி சார்ஜண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பழைய நகைக்குப் புதிய நகை தருவதாக 214 பவுன் மோசடி: பட்டறை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு!

பழைய நகைக்குப் பதிலாகப் புதிய நகை செய்து தருவதாகக் கூறி, 43 பேரிடம் 214 பவுன் நகைகளை மோசடி செய்த நகைப் பட்டறை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் 1,850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: வியாபாரி கைது - லோடு ஆட்டோ, பைக் பறிமுதல்!

தூத்துக்குடியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசியைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வங்கி அதிகாரி போன்று பேசி தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு!

தூத்துக்குடியில் வங்கி அதிகாரி போன்று செல்போனில் பேசி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

லாரி மோதி உயரழுத்த மின் வயர் அறுந்து விழுந்தது : தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே பரபரப்பு!

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசல் முன்பு வட மாநிலத்திலிருந்து வந்த உயரமான கண்டெய்னர் லாரி மோதியதில், உயர் அழுத்த மின்சார வயர்கள் அறுந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு கத்தியைக் காட்டி கொலை மிரட்டல்: வழக்கறிஞர் கைது!

பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட காவல் ஆய்வாளருக்கு வீடு புகுந்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தவெக அரசைக் கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிக்கை!

கயத்தாறு வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசு மற்றும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்ட இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட சிறப்பு முகாம்கள் : இளம் வாக்காளர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளுக்கு 'ஆதரவு நபர்கள்' நியமனம்: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழிகாட்ட ஆதரவு நபர்கள் தேர்வுக்கு நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

புற்றுநோய் விழிப்புணர்வு ஃபேஷன் ஷோ: நர்சிங் கல்லூரி மாணவிகள் அசத்தல்!

கோவில்பட்டி மற்றும் பரமக்குடி ரோட்டரி சங்கங்கள் சார்பில் கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

தூத்துக்குடியில் 3 மாதங்களில் 228 இடங்களில் சாலைப் பணிகள் நிறைவு - மாநகராட்சி நிர்வாகம் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 228 இடங்களில் பள்ளங்கள் கண்டறியப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.