தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, கையில் அரிவாளுடன் இருக்கும் வீடியோவை வாலிபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்துக் கண்காணிப்பு மேற்கொண்ட மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், வீடியோவில் இருந்த நபர் மாசார்பட்டி, ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகன் ஆனந்த் (21) என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொருவர் கைது:
இதேபோல், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் குறித்துப் புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் புதியம்புத்தூர், புதுப்பச்சேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் சாமி மகன் கார்த்திக் என்கிற கவாஸ்கர் (24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரையும் புதியம்புத்தூர் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

