தமிழ்நாடு

Browse content

நகராட்சி ஆணையர் வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் பணப் பரிமாற்றம் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

காயல்பட்டினம் நகராட்சி ஆணையரின் வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கு இடமான பணப் பரிமாற்றங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில், விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நடத்துனரைத் தற்கொலைக்குத் தூண்டிய கிளை மேலாளர் மீது நடவடிக்கை கோரி சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில், அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துனரைத் தரக்குறைவாகப் பேசித் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கிளை மேலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குப்பைகளை 4 வகைகளாகப் பிரிக்காவிட்டால் கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் 100% குப்பை தரம் பிரித்து வழங்காவிட்டால் கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் 11-வது தேசிய ஆயுர்வேத தின விழா: சிறப்பு மருத்துவ முகாம், கண்காட்சி!

11-வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆயுர்வேத பிரிவு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது.

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனை 3 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு!

தொழிலதிபர் வீரமணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே கழிவுநீர் தேக்கம் : துர்நாற்றத்தால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகிலேயே பிரதான சாலையோரம் கழிவுநீர் தேங்குவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரி மாணவர்கள் சாதனை: வெள்ளப்பட்டியில் 1,000 பனை விதைகள் நடவு!

தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 'ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம்' வெள்ளப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

14 வயது சிறுமிகளுக்கு இலவசக் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி: ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்!

14 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகளைக் கருப்பைவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாத்திடத் தடுப்பூசி செலுத்துமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரயில்வே நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையால் நடைமேடை விளக்குகள் சீரமைப்பு; பயணிகள் மகிழ்ச்சி!

நாங்குநேரி ரயில் நிலையத்தில், பழுதடைந்திருந்த நடைமேடை விளக்குகள் உடனடியாகச் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

வீட்டு வசதி வாரிய வணிகமனைகள் மின்னணு ஏலம்: விண்ணப்பிக்க அக்டோபர் 9 வரை கால நீட்டிப்பு!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திருநெல்வேலி பிரிவின்கீழ் காலியாக உள்ள 55 வணிகமனைகளுக்கான மின்னணு ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிவந்தி ஆதித்தனார் 91வது பிறந்த நாள் விழா: தமிழ்நாடு அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!

பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள முழுவுருவசிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்